கடைசி ஓவரில் எதற்காக ஜடேஜா? பிராவோ எங்கே? தோனி விளக்கம்

​தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் கடைசி ஓவரை ஜடேஜா வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 2 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள நிலையில் கடைசி ஓவரை ஜடேஜா வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் ஷிகர் தவானின் சதத்தால் தில்லி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரில் சாம் கரண் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்த கடைசி ஓவரில் தில்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோவுக்கு 1 ஓவர் மிதமிருந்த நிலையில், கடைசி ஓவரை ரவீந்திர ஜடஜா வீசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 2 இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், இந்த முடிவு விமரிசனத்துக்குள்ளானதாக அமைந்தது. அக்சர் படேல் 3 சிக்ஸர்கள் அடிக்க தில்லி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரை பிராவோ வீசாமல் ஜடேஜா வீசியது ஏன் என்ற கேள்வியை ஆட்டம் முடிந்தவுடன் தோனியிடம் எழுப்பப்பட்டது. 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தோனி தெரிவித்ததாவது:

"பிராவோ முழு உடற்தகுதியுடன் இல்லை. களத்தைவிட்டு சென்ற அவரால் திரும்ப வர முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கடைசி ஓவரை ஜடேஜா வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை வீசுவது கரண் சர்மாவா, ஜடேஜாவா என்பதுதான் வாய்ப்பாக இருந்தது. ஜடேஜா வீசினார்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com