ரஸ்ஸலை விடவும் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள பேட் கம்மின்ஸ்!

பேட் கம்மின்ஸ், இந்த வருட ஐபிஎல் போட்டியில் எதிர்பாராதவிதமாக பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.
ரஸ்ஸலை விடவும் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள பேட் கம்மின்ஸ்!

கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்த வருட ஐபிஎல் போட்டியில் எதிர்பாராதவிதமாக பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது. இதன்மூலம் 6-வது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

முன்னதாக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சோ்த்தது. பின்னா் ஆடிய மும்பை அணி 16.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், சிறப்பாக பேட்டிங் செய்து 36 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டி20 ஆட்டத்தில் அவர் அடித்துள்ள முதல் அரை சதமாகும்.

பிரபல வீரர்கள் உள்ள கொல்கத்தா அணியில் ரஸ்ஸல், தினேஷ் கார்த்தி, சுனில் நரைன் ஆகியோரை விடவும் அதிக ரன்கள் எடுத்துள்ளார் கம்மின்ஸ்.

ஐபிஎல் 2020: கேகேஆர் அணி - அதிக ரன்கள்

1. கில் - 275 ரன்கள்
2. மார்கன் - 214 ரன்கள்
3. நிதிஷ் ராணா - 155 ரன்கள்
4. ராகுல் திரிபாதி - 144 ரன்கள்
4. கம்மின்ஸ் - 126 ரன்கள்
5. தினேஷ் கார்த்திக் - 112 ரன்கள்
6. ரஸ்ஸல் - 83 ரன்கள்
7. சுனில் நரைன் - 44 ரன்கள்

அதேபோல அதிக சிக்ஸர்களிலும் பல வீரர்களைத் தாண்டியுள்ளார் கம்மின்ஸ். 8 ஆட்டங்களில் 7 சிக்ஸர்களை அவர் அடித்துள்ளார். இது தோனி, ரஸ்ஸல், ரிஷப் பந்த், ஃபிஞ்ச், தவன் ஆகிய பிரபல வீரர்கள் அடித்த சிக்ஸர்களை விடவும் அதிகமாகும். 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கம்மின்ஸை ரூ. 15.50 கோடிக்குத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்குத் தேர்வான வெளிநாட்டு வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com