ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: கடைசி இடத்திலிருந்து 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள பஞ்சாப் அணி!

மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி தற்போது 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: கடைசி இடத்திலிருந்து 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள பஞ்சாப் அணி!

நேற்று நடைபெற்ற இரு ஐபிஎல் ஆட்டங்களில் கொல்கத்தாவும் பஞ்சாப்பும் வெற்றி பெற்றன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 35-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை சூப்பா் ஓவா் முறையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வென்றது.

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஹைதராபாதும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. வெற்றியாளரை தீா்மானிக்க விளையாடப்பட்ட சூப்பா் ஓவரில் கொல்கத்தா வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் சூப்பா் ஓவா் முறையில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாபும் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் சமன் ஆனதை அடுத்து நடைபெற்ற சூப்பா் ஓவரிலும் இரு அணிகளும் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் சமன் ஆக, 2-ஆவது சூப்பா் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணி தற்போது 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி 2-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. தில்லி 9 7 2 14 +0.921
 2. மும்பை 9 6 3 12 +1.201
 3. பெங்களூர்  9 6 3 12 -0.096
 4. கொல்கத்தா 9 5 4 10 -0.607
 5. ஹைதராபாத்  9 3 6 6 +0.008
 6. பஞ்சாப் 9 3 6 6 -0.262
 7. சென்னை 9 3 6 6 -0.386
 8. ராஜஸ்தான் 9 3 6 6 -0.778

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com