2-வது சூப்பர் ஓவர்: பஞ்சாப்புக்கு 12 ரன்கள் இலக்கு

​2-வது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த மும்பை 11 ரன்கள் எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


2-வது சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த மும்பை 11 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ல், கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் 2 அணிகளும் தலா 5 ரன்கள் அடித்து சமனில் முடிந்ததால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. 

முதல் சூப்பர் ஓவரில் பஞ்சாப் முதல் பேட்டிங் செய்ததால், இந்த சூப்பர் ஓவரில் மும்பை முதல் பேட்டிங் செய்தது. மும்பையில் இந்த முறை கைரன் போலார்ட் மற்றும் ஹார்திக் பாண்டியா களமிறங்கினர். பஞ்சாப்புக்கு ஜோர்டன் பந்துவீசினார்.

முதல் பந்தில் போலார்ட் 1 ரன் எடுக்க, 2-வது பந்தை ஜோர்டன் வைடாக வீசினார். 2-வது பந்தில் பாண்டியா 1 ரன் எடுத்தார். 3-வது பந்தை எதிர்கொள்ள ஸ்டிரைக்குக்கு வந்த போலார்ட் பவுண்டரி அடித்தார். 4-வது பந்தை மீண்டும் வைடாக வீசினார் ஜோர்டன். 4-வது பந்தில் 2-வது ரன் எடுக்க முயன்றபோது பாண்டியா ரன் அவுட் ஆனார். இதையடுத்து, 5-வது பந்தில் போலார்ட் ஆட்டமிழந்தார். ஆனால், ரிவியூ கேட்க விக்கெட் இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து, கடைசி பந்தை ஜோர்டன் வீசினார். அதை சிக்ஸருக்கு பறக்கவிட முயற்சித்தார் போலார்ட். ஆனால், அகர்வால் பவுண்டரி எல்லையில் அதை மிகச் சிறப்பாகத் தடுத்தார்.

இதன்மூலம், மும்பை அணி 2-வது சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com