இன்றைய ஆட்டத்தில் இளம் வீரர் பிரித்வி ஷா நீக்கம்: காரணம் என்ன?

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரர் பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி.
இன்றைய ஆட்டத்தில் இளம் வீரர் பிரித்வி ஷா நீக்கம்: காரணம் என்ன?

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் இளம் வீரர் பிரித்வி ஷாவை நீக்கியுள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி.

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தில்லி கேபிடல்ஸ் அணி 2-ம் இடத்திலும் கொல்கத்தா அணி 4-ம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் அபு தாபியில் நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.

டாஸ் வென்ற தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். நோர்கியோ, ரஹானா ஆகியோர் சாம்ஸ், பிரித்வி ஷாவுக்குப் பதிலாக தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மீண்டும் இடம்பிடித்துள்ளார். குல்தீப் யாதவுக்குப் பதிலாக நாகர்கோட்டி விளையாடுகிறார். 

20 வயது பிரித்வி ஷா, இந்தியாவுக்காக 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டிருப்பது விவாதமாக மாறியுள்ளது. ஆனால் கடந்த சில ஆட்டங்களாக மோசமாக விளையாடி வருவதால் தில்லி அணி இந்த முடிவை எடுத்துள்ளது.  

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 10 ஆட்டங்களில் 209 ரன்கள் மட்டுமே பிரித்வி ஷா எடுத்துள்ளார். அதில் 2 அரை சதங்கள். கடந்த 5 ஆட்டங்களில் இருமுறை டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த 5 ஆட்டங்களில் மொத்தமாக 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அவரை அணியிலிருந்து நீக்கியுள்ளார் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர். அவருக்குப் பதிலாக மும்பை பேட்ஸ்மேன் ரஹானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தில்லி அணியின் இந்த முடிவு பலனை அளிக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com