இந்திய டெஸ்ட் அணிக்கு முகமது சிராஜ் தேர்வானது ஏன்?

கடந்த சில வருடங்களாக இந்திய ஏ அணிக்காக சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் சிராஜ்.
இந்திய டெஸ்ட் அணிக்கு முகமது சிராஜ் தேர்வானது ஏன்?

டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளார். 

கடந்த சில வருடங்களாக இந்திய ஏ அணிக்காக சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் சிராஜ். கடந்த வருட ரஞ்சி கோப்பையில் 5 ஆட்டங்களில் 19 விக்கெட்டுகளை எடுத்தார். தென் ஆப்பிரிக்கா, மே.இ. தீவுகள் ஏ அணிகளுக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பெற்று விளையாடினார். 

2018 இறுதியில் பல டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் கொண்ட ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். மே.இ. தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு எதிரான 5 முதல்தர ஆட்டங்களில் 40 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் தான் அவருக்குரிய மதிப்பைத் தேர்வுக்குழு வழங்கியுள்ளது.

26 வயது சிராஜ், ஒரு ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 

கடந்த வாரம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது. 3 விக்கெட்டுகள் எடுத்த ஆர்சிபியின் சிராஜ், 2 மெயிடன் ஓவர்கள் வீசி சாதனை படைத்தார். ஐபிஎல் போட்டியில் அதற்கு முன்பு எந்தவொரு பந்துவீச்சாளரும் ஒரே ஆட்டத்தில் 2 மெயிடன் ஓவர்களை வீசியதில்லை.

இதுபோல கிடைத்த வாய்ப்புகளில் திறமையைப் பயன்படுத்தியதால் இந்திய டெஸ்ட் அணியில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com