தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆலோசனைகள் கூறிய தோனி: விடியோ

நேற்றைய ஆட்டத்திலும் தோனியை வீழ்த்தினார் வருண் சக்ரவர்த்தி.
தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு ஆலோசனைகள் கூறிய தோனி: விடியோ

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்திக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி ஆலோசனைகள் கூறிய விடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார் ஜடேஜா. கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் இரு சிக்ஸர்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.  

இதற்கு முன்பு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 

அந்த ஆட்டத்தில் 11 ரன்களில் தோனியை போல்ட் செய்து வெளியேற்றினார் வருண் சக்கரவர்த்தி. தமிழகத்தைச் சேர்ந்த வருண், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆட்டம் முடிந்த பிறகு அவர் பேசியதாவது: மூன்று வருடங்களுக்கு முன்பு தோனியின் பேட்டிங்கைப் பார்ப்பதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்து கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பேன். இப்போது அவருக்கு எதிராகப் பந்துவீசியுள்ளேன். இது நம்பமுடியாத தருணம். நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தோனியுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். தல தல தான் என்றார்.

நேற்றைய ஆட்டத்திலும் தோனியை வீழ்த்தினார் வருண் சக்ரவர்த்தி. இதையடுத்து ஆட்டம் முடிந்த பிறகு வருண் சக்ரவர்த்திக்கு தோனி சில அறிவுரைகளைக் கூறினார். இதன் விடியோவை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ள இந்திய டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி தேர்வாகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com