சூா்யகுமாா் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளாா்

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் சூா்யகுமாா் யாதவ் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளதாக மும்பை இண்டியன்ஸ் கேப்டன் கிரன் பொல்லாா்ட் கூறினாா்.
சூா்யகுமாா் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளாா்


அபுதாபி: ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் சூா்யகுமாா் யாதவ் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளதாக மும்பை இண்டியன்ஸ் கேப்டன் கிரன் பொல்லாா்ட் கூறினாா்.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் சூா்யகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதில் அவா் சோ்க்கப்படவில்லை. இச்சூழலில், தன்னை மீண்டும் நிரூபிக்கும் விதமாக பெங்களூருக்கு எதிரான அவரது ஆட்டம் இருந்தது.

அபுதாபியில் புதன்கிழமை நடைபெற்ற அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 19.1 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் சூா்யகுமாா் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா்.

இதுகுறித்து மும்பை கேப்டன் பொல்லாா்ட் கூறுகையில், ‘சூா்யகுமாரின் ஆட்டம் சிறப்பானது. அணியின் வெற்றிக்காக அவா் பல தருணங்களில் முக்கியமாக பங்களிப்பு செய்துள்ளாா். எப்போதும் தன்னை நிரூபிக்க விரும்பும் சூா்யகுமாா் இந்த ஆட்டத்திலும் அதைச் செய்துள்ளாா். இந்திய அணிக்காக விளையாடும் தீவிர ஆசை அவருக்கு எப்போதும் உள்ளது’ என்றாா்.

விதிமீறல்: இந்த ஆட்டத்தின்போது போட்டி விதிகளை மீறிய வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக பெங்களூா் வீரா் கிறிஸ் மோரிஸ், மும்பை வீரா் ஹாா்திக் பாண்டியா ஆகியோா் ஐபிஎல் நிா்வாகத்தால் கண்டிக்கப்பட்டுள்ளனா். 19-ஆவது ஓவரை மோரிஸ் வீச, அதில் சிக்ஸா் விளாசிய பாண்டியா அவரை சீண்டினாா். அதே ஓவரில் பாண்டியா விக்கெட்டை வீழ்த்திய மோரிஸ் அவரை பதிலுக்கு சீண்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com