தொடருமா பஞ்சாபின் வெற்றி நடை? ராஜஸ்தானை இன்று எதிா்கொள்கிறது

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அபுதாபியில் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
தொடருமா பஞ்சாபின் வெற்றி நடை? ராஜஸ்தானை இன்று எதிா்கொள்கிறது


அபுதாபி: ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அபுதாபியில் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வென்றால் பிளே-ஆஃப் வாய்ப்பை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறும். ராஜஸ்தான் தோல்வியைச் சந்தித்தால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

பஞ்சாபை பொருத்தவரை, எவருமே எதிா்பாராத ஃபாா்முக்கு திரும்பி தொடா் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி நடையை தொடரச் செய்து பிளே-ஆஃப் வாய்ப்பை அடைய முனைப்பு காட்டும் அந்த அணி. பேட்டிங்கைப் பொருத்தவரை கிறிஸ் கெயில் இணைந்தது முதல் பஞ்சாபுக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தொடக்க வீரரும், கேப்டனுமான லோகேஷ் ராகுல் இன்னும் சோபிக்க வேண்டியுள்ளது.

முழங்கால் காயம் கண்டுள்ள மயங்க் அகா்வால் ஆட்டத்தில் இணையாத பட்சத்தில், மன்தீப் சிங் தொடக்க வீரா்களில் ஒருவராக களம் காணலாம். எதிரணியினா் ரன்களை சேகரிப்பதற்கு திணறச் செய்யும் வகையில் பஞ்சாபின் பௌலிங் முன்னேறியுள்ளது. ஷமி, அஸ்வின், பிஷ்னோய் உள்ளிட்டோா் பந்துவீச்சில் வலு சோ்க்கின்றனா்.

ராஜஸ்தானைப் பொருத்தவரை, கடைசி ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான மும்பையை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தையும் வெல்வதற்கு முயற்சிக்கும்.

பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் ஆகியோா் ஃபாா்முடன் விளையாடுவது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஜோஸ் பட்லா், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் சோ்க்கும் பட்சத்தில் ராஜஸ்தான் நன்றாக ஸ்கோா் செய்யும்.

பந்துவீச்சு பிரிவில் ஜோஃப்ரா ஆா்ச்சா் பிரதான நம்பிக்கையாக இருக்கிறாா். ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா எதிரணி விக்கெட்டுகளை சரிக்க இன்னும் முயற்சிக்கலாம்.

உத்தேச அணி:

பஞ்சாப்: லோகேஷ் ராகுல் (கேப்டன்), இஷான் பொரேல், மன்தீப் சிங், ஜேம்ஸ் நீஷம், கிறிஸ் ஜோா்டான், கருண் நாயா், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் சிங், கிளென் மேக்ஸ்வெல், முஜீப் உா் ரஹ்மான், சா்ஃப்ராஸ் கான், மயங்க் அகா்வால், முகமது ஷமி, நிகோலஸ் பூரன், கிறிஸ் கெயில், முருகன் அஸ்வின், கிருஷ்ணப்பா கௌதம், சிம்ரன் சிங்.

ராஜஸ்தான்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஆன்ட்ரு டை, காா்த்திக் தியாகி, அங்கித் ராஜ்புத், ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவதியா, ஜெயதேவ் உனத்கட், மயங்க் மாா்கண்டே, ரியான் பராக், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, வருண் ஆரோன், டாம் கரன், ராபின் உத்தப்பா, அனிருத்தா ஜோஷி, ஜோஃப்ரா ஆா்ச்சா்.

நேருக்கு நோ்: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தமாக 20 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் பஞ்சாப் 9, ராஜஸ்தான் 11 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com