சூப்பர் ஓவர்களில் கில்லியாகப் பந்துவீசும் ரபாடா

ஐபிஎல் போட்டியில் இதுவரை இரு சூப்பர் ஓவர்களில் பந்துவீசி இரண்டிலும் தனது அணிக்கு...
சூப்பர் ஓவர்களில் கில்லியாகப் பந்துவீசும் ரபாடா


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னா், ஆடிய பஞ்சாப் அணியும் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க ஆட்டம் டையானது. இதையடுத்து, நடைபெற்ற சூப்பா் ஓவரில் தில்லி அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து வெற்றியைத் தீா்மானிக்க சூப்பா் ஓவரில் இரு அணிகளும் விளையாடின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ராகுல், ரபாடா வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தாா். அவரைத் தொடா்ந்து பூரண் ஆட்டமிழந்தாா். இதையடுத்து 3 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தில்லி அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. சூப்பா் ஓவரில் இதுதான் மிகக்குறைவான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் இதுவரை இரு சூப்பர் ஓவர்களில் பந்துவீசி இரண்டிலும் தனது அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார் ரபாடா.

vs கொல்கத்தா, 2019 - 11 ரன்களை எடுக்க விடாமல் செய்தார். ரஸ்ஸலை போல்ட் செய்தார். 

vs பஞ்சாப், 2020 - 2 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

ரபாடாவைத் தவிர ஐபிஎல்-லில் இரு சூப்பர் ஓவர்களில் பந்துவீசி இரண்டிலும் தனது அணிக்கு வெற்றி தேடித் தந்த மற்றொரு வீரர், பும்ரா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com