ஐபிஎல் கிரிக்கெட்: 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட்: 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான 4 ஆம் ஆட்டம் சார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித், ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதலில் களமிறங்கிய ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேற, பின் களமிறங்கிய சாம்சன், ஸ்மித்துடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இவர் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் அவுட்டானார். பின் களமிறங்கிய மில்லர் (0), உத்தப்பா (5), ராகுல் டெவெட்டியா (10), பராக் (6) அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்நிலையில் அதிரடியாக ஆடிய ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த போது சாம் கரண் பந்துல் அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது. டாம் கரண் 10 ரன்களுடனும், கடைசி ஓவரில் 4 சிக்ஸர் அடித்த ஆர்ச்சர் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை அணி சார்பில் பந்து வீச்சில் சாம் கரண் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 164 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய சென்னை அணியில் வாட்சனும், முரளி விஜயும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் இருவரும் சற்று தடுமாறினாலும் பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜயும் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டூபிளெஸ்ஸி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் யாரும் நிலைத்துநின்று ஆடவில்லை. சாம் கரண் 17, ருத்துராஜ் கெய்க்வாட் 0, ஜாதவ் 22 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் வந்த கேப்டன் தோனி டூபிளெஸ்ஸிக்கு துணை நின்றார். ஒருகட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டூபிளெஸ்ஸி 37 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் கடைசி வரை நின்ற தோனியால் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை.

இதையடுத்து சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் தோனி 29 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com