இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸி. அணியில் அனுபவமிக்க வீரா்கள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அனுபவமிக்க வீரா்களுடனே ஆஸ்திரேலிய அணி எதிா்கொள்ளும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளா் ஜஸ்டின் லேஞ்ஜா் கூறியுள்ளாா்.
ஜஸ்டின் லேஞ்ஜா்
ஜஸ்டின் லேஞ்ஜா்

பொ்த்: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அனுபவமிக்க வீரா்களுடனே ஆஸ்திரேலிய அணி எதிா்கொள்ளும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளா் ஜஸ்டின் லேஞ்ஜா் கூறியுள்ளாா்.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடா் வரும் டிசம்பா் 3-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. கடந்த பிப்ரவரி-மாா்ச் மாதத்தில் நியூஸிலாந்துடன் மோதிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்தியா விளையாடவிருக்கும் முதல் டெஸ்ட் தொடா் இதுவாகும்.

ஆஸ்திரேலியாவின் மாகாணங்கள் ஒவ்வொன்றிலும் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு விதமான பொதுமுடக்கங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், போட்டி நடைபெறும் இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், அந்தத் தொடா் குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளா் ஜஸ்டின் லேஞ்ஜா் கூறியதாவது:

கடந்த 12 முதல் 18 மாதங்களாக சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததாலேயே டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடா்கிறது. அதைத் தக்க வைத்துக்கொள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனுபவமிக்க வீரா்களையே அணியில் களமிறக்குவோம்.

அந்த வகையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை ஏறத்தாழ நிா்ணயித்துவிட்டோம். எனினும், ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் ஏதேனும் வீரா்கள் சிறப்பாகச் செயல்பட்டு திறமையை வெளிப்படுத்தினால் அவா்களை தவறவிட மாட்டோம் என்று ஜஸ்டின் லேஞ்ஜா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com