109 ரன்களுக்கு ஆல் அவுட்: பெங்களூரு படுதோல்வி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
109 ரன்களுக்கு ஆல் அவுட்: பெங்களூரு படுதோல்வி


கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 6-வது ஆட்டத்தில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி ராகுலின் அதிரடி சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 207 ரன்கள் என்ற கடின இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. காட்ரெல் மற்றும் ஷமி வீசிய முதல் 3 ஓவர்களில் தேவ்தத் படிக்கல், ஜோஷ் பிலிப் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

ராகுலின் அதிரடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த பெங்களூருவுக்கு, இந்த மோசமான தொடக்கம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால், அனைத்து நெருக்கடியும் ஆரோன் ஃபின்ச் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் வசம் சென்றது. இந்த இணையும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பின்ச் 20 ரன்களுக்கு பிஷ்னாய் பந்திலும், டி வில்லியர்ஸ் 28 ரன்களுக்கு முருகன் அஸ்வின் பந்திலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், பஞ்சாபின் வெற்றி இந்த இடத்திலேயே மிகவும் எளிதானது.

அடுத்து களமிறங்கிய துபே 12 ரன்களுக்கு மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு டெயிலண்டர்களை பிஷ்னாய் மற்றும் அஸ்வின் அடுத்தடுத்து வீழ்த்தினர். 16.2 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. பஞ்சாப் அணியில் ராகுல் மட்டுமே ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

பஞ்சாப் அணித் தரப்பில் பிஷ்னாய் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com