என் வாழ்க்கையில் பார்த்த மிகச்சிறந்த ஃபீல்டிங்: சச்சின் புகழாரம்

பவுண்டரிக்கு வெளியே எகிறி குதித்து கேட்ச் பிடித்தாலும் விழுவது உறுதி என்பதால்...
என் வாழ்க்கையில் பார்த்த மிகச்சிறந்த ஃபீல்டிங்: சச்சின் புகழாரம்

ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது.

ராஜஸ்தான் அணி இலக்கை விரட்டியபோது 8-வது ஓவரில் முருகன் அஸ்வின் வீசிய பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸருக்கு அனுப்ப முயன்றார். பந்து பவுண்டரியைத் தாண்டிச் சென்றதை கேட்ச் பிடிக்க முயன்றார் பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரண். பவுண்டரிக்கு வெளியே எகிறி குதித்து கேட்ச் பிடித்தாலும் விழுவது உறுதி என்பதால் கீழே விழும் சமயத்தில் பந்தை மைதானத்துக்குள் வீசினார். இதனால் அவர் நான்கு ரன்களை அணிக்குச் சேமித்துக் கொடுத்தார். நிச்சயம் சிக்ஸராக வேண்டிய அந்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்ற நிகோலஸ் பூரணின் முயற்சியை கிரிக்கெட் உலகின் பிரபலங்கள் அனைவரும் பாராட்டியுள்ளார்கள்.

ட்விட்டரில் சச்சின் கூறியதாவது:

என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த ஃபீல்டிங் இதுதான். அட்டகாசம் என்றார். 

பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் கூறியதாவது: சிறந்த ஃபீல்டிங் என கிரிக்கெட் கடவுள் இதைப் பற்றி முடிவு எடுத்துவிட்டால் அதற்கு மறுப்பு எதுவும் இல்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com