பிசிசிஐ தலைவராக இருந்தாலும் இந்தியாவுக்காக 500 ஆட்டங்கள் விளையாடியுள்ளேன்: விமர்சனங்களுக்கு கங்குலி பதில்

விராட் கோலியாக இருந்தாலும் ஷ்ரேயஸ் ஐயராக இருந்தாலும்...
படம் - instagram.com/souravganguly/
படம் - instagram.com/souravganguly/

பிசிசிஐ தலைவராக இருந்தாலும் இந்தியாவுக்காக 500 ஆட்டங்கள் விளையாடியுள்ளேன் என செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

தில்லி அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சமீபத்தில் பேட்டியளித்தபோது, பொறுப்புகளை எப்படி ஏற்கவேண்டும் என்பது பாண்டிங், கங்குலியிடம் கற்றுக்கொண்டுள்ளேன். இதனால் என் வேலை சுலபமாகியுள்ளது என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிசிசிஐ தலைவராக இருந்தாலும் தான் பணியாற்றிய ஐபிஎல் அணியுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறாரா கங்குலி என்கிற கேள்வி எழுந்தது. பிறகு இதுகுறித்து விளக்கம் அளித்தார் ஷ்ரேயஸ் ஐயர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து கங்குலி கூறியதாவது:

ஸ்ரேயஸ் ஐயருக்குக் கடந்த வருடம் உதவி செய்தேன். பிசிசிஐ தலைவராக இருந்தாலும் இந்தியாவுக்காக 500 ஆட்டங்கள் (424 ஆட்டங்கள்) விளையாடியுள்ளேன் என்பதை மறந்துவிட வேண்டாம். விராட் கோலியாக இருந்தாலும் ஷ்ரேயஸ் ஐயராக இருந்தாலும் இளம் வீரர்களுக்கு உதவி செய்வேன். அவர்களுக்கு என் உதவி தேவைப்பட்டாலும் நிச்சயம் செய்வேன் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com