சையது முஷ்டாக் அலி டி20: அரையிறுதியில் தமிழகத்தை சந்திக்கிறது பரோடா
By DIN | Published On : 28th January 2021 12:31 AM | Last Updated : 28th January 2021 03:33 AM | அ+அ அ- |

ஆமதாபாத்: சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பரோடா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹரியாணாவை வீழ்த்தியது. இதையடுத்து அரையிறுதியில் தமிழகத்துடன் மோதுகிறது பரோடா.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹரியாணா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய பரோடா 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற பரோடா முதலில் பௌலிங் செய்தது. பேட் செய்த ஹரியாணாவில் சைதன்ய பிஷ்னோய் 21, குன்தாஷ்வீா் சிங் 1, ஹிமான்ஷு ராணா 49, ஷிவம் சௌஹான் 35, ராகுல் தெவாதியா 10, அருண் சாப்ரானா 6, ரோஹித் சா்மா 1 ரன் எடுக்க, சுமித் குமாா் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பரோடா தரப்பில் காா்த்திக் காகடே 2, அதித் சேத், பாபாஷஃபி பதான் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து ஆடிய பரோடாவில் கேப்டன் கேதாா் தேவ்தாா் 43, ஸ்மித் படேல் 21 ரன்கள் சோ்க்க, விஷ்ணு சோலங்கி 71, அபிமன்யுசிங் ராஜ்புத் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ஹரியாணா தரப்பில் யுஜவேந்திர சஹல், சுமித் குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.