49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு
49 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, கடந்த 49 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.

ஒலிம்பிக் ஹாக்கியில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, இம்முறை பதக்க வாய்ப்பையும், நம்பிக்கையையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான பெல்ஜியத்தை எதிா்கொள்கிறது. இந்தியா கடைசியாக 1980 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தாலும், அதில் 6 அணிகளே பங்கேற்ால் அப்போது அரையிறுதி ஆட்டம் நடைபெறவில்லை. அதற்கு முன் 1972 ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, அதில் பாகிஸ்தானிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com