ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: காலிறுதியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அடித்த கோல்களின் விடியோ
By DIN | Published On : 02nd August 2021 12:17 PM | Last Updated : 02nd August 2021 12:20 PM | அ+அ அ- |

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி காலிறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை நேற்று வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, கடந்த 49 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். அடுத்த நாளே இந்திய மகளிர் அணியும் நம்பமுடியாத வெற்றியை அடைந்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிக்க | டோக்கியோ ஒலிம்பிக்ஸில் புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி
இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அடித்த கோல்களின் விடியோக்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மகளிர் அணி அடித்த கோல்
இந்திய ஆடவர் அணி அடித்த கோல்கள்