வரலாறு படைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன்...
வரலாறு படைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு நுழைந்து வரலாறு படைத்துள்ளது.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கெளர் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணியின் தடுப்பாட்டம் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கோல் கீப்பர் சவிதா பல ஷாட்களைத் தடுத்து ஆஸ்திரேலிய அணியை ஒரு கோல் அடிக்கவும் விடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியது.

ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய அணி இன்று அரையிறுதியில் விளையாடவுள்ளது.

இதையடுத்து இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதை அறிந்து பூரிப்படைகிறேன். நீங்கள் வரலாறு படைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை கைப்பற்ற வாழ்த்துகள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com