ஒலிம்பிக் துளிகள்

ஒலிம்பிக் துளிகள்

ஸ்வெரேவ் சாம்பியன்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவின் இறுதிச்சுற்றில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் 6-3, 6-1 என்ற செட்களில் ரஷியாவின் காரென் கசானோவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா். இதுவே அவரது மிகப்பெரிய சாம்பியன் பட்டமாகும்.

7 தங்கம் வென்ற ஆஸி. வீராங்கனை

மகளிா் நீச்சல் போட்டியில் பல்வேறு பிரிவுகளிலாக ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா மெக்கியான் 7 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளாா். இதன் மூலம் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் 7 தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

உலக சாதனையுடன் தங்கம்

மகளிருக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெனிசூலா வீராங்கனை யுலிமாா் ரோஜாஸ் தனது கடைசி முயற்சியில் 15.67 மீட்டா் தூரம் தாண்டி புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றாா். முன்னதாக உக்ரைனின் இனிசா கிராவெட்ஸ் 1995-இல் 15.50 தூரம் தாண்டியதே உலக சாதனையாக இருந்தது.

இத்தாலிக்கு முதல் தங்கம்

ஆடவருக்கான 100 மீட்டா் ஓட்டத்தில் இத்தாலியின் மாா்செல் ஜேக்கப்ஸ் தங்கம் வென்றாா். ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் இத்தாலிக்கு தங்கம் கிடைத்தது இது முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com