ஒலிம்பிக்ஸ் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவி தாஹியா: போட்டி எப்போது நடைபெறுகிறது?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தப் போட்டியில் இரு இந்தியர்கள் பதக்கங்களைப் பெற்று தரும் தருணங்களுக்காக...
ஒலிம்பிக்ஸ் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவி தாஹியா: போட்டி எப்போது நடைபெறுகிறது?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தப் போட்டியில் இரு இந்தியர்கள் பதக்கங்களைப் பெற்று தரும் தருணங்களுக்காக இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். 

தாஹியா தொடக்க சுற்றில் கொலம்பியாவின் டைக்ரரோஸ் அர்பனோவை 13-2 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தினார். அடுத்ததாக காலிறுதியில் பல்கேரியாவின் ஜியார்ஜி வாலென்டினோவ் வாங்கெலோவை 14-4 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். அதில் கஜகஸ்தானின் நுரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார் ரவி தாஹியா. கடைசி நேரத்தில் 2-9 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த தாஹியா, அதிரடியாக தனது பலத்தை பிரயோகித்து விளையாடினார்.  இதனால் 9-7 என இடைவெளியைக் குறைத்தார். காயமடைந்த நுரிஸ்லாம், புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தபோதும் ரவி தாஹியாவின் ஆக்ரோஷ ஆட்டத்தால் இறுதியில் வீழ்ந்தார். 

இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் தாஹியா, நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் ஜாவுர் உகுயேவை எதிர்கொள்கிறார். 

அரையிறுதிச் சுற்றில் தாஹியா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியாகியுள்ளது. 

மற்றொரு இந்தியரான தீபக் புனியா 86 கிலோ பிரிவில் போட்டியிட்டு அரையிறுதிச்சுற்றில் வீழ்ந்தார். அடுத்ததாக அவர் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் களம் காண்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com