ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பஜ்ரங் புனியா

ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பஜ்ரங் புனியா

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு நுழைந்துள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு நுழைந்துள்ளார். 

இன்று நடைபெற்ற ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் முதல் ஆட்டத்தில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த எர்னாசருடன் மோதினார். முதல் பகுதியில் 3-1 என முன்னிலை பெற்றார் பஜ்ரங் புனியா. எனினும் பிறகு எர்னாசர் சிறப்பாக விளையாடி சமன் செய்தார். கடைசிக்கட்டத்தில் பஜ்ரங் தடுமாறினாலும் புள்ளி எதுவும் விட்டுக்கொடுக்கவில்லை. ஒரே நேரத்தில் அதிகப் புள்ளிகளை எடுத்த காரணத்துக்காக பஜ்ரங் புனியா வென்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் ஈரானின் மொர்டசாவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. ஆட்டத்தின் பாதி வரை மொர்டசா, பஜ்ரங்குக்குக் கடும் சவாலை அளித்தார். இதனால் பஜ்ரங் தோற்றுவிடுவார் என ரசிகர்கள் பயந்தார்கள். ஆனால் திடீரென ஆவேசம் கொண்டு மொர்டசாவைத் தரையில் வீழ்த்தினார் பஜ்ரங் புனியா. இதையடுத்து அரையிறுதிச் சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார். 

அரையிறுதியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மூன்று முறை உலக சாம்பியனான அஜர்பைஜானைச் சேர்ந்த ஹஜி அலீவுடன் மோதுகிறார் பஜ்ரங் புனியா. இதில் வெற்றி பெற்றால் தங்கத்துக்கான போட்டியில் அவர் போட்டியிடுவார். 

இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா, 50 கிலோ பிரிவில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தார். 27 வயது சீமா, 1-3 என்கிற புள்ளிக்கணக்கில் துனிசியாவின் சாரா ஹம்தியிடம் தோற்று ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com