மல்யுத்தம்: வெண்கலம் வெல்வாரா பஜ்ரங் புனியா?

ஆடவா் மல்யுத்தத்தில் தங்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட பஜ்ரங் புனியா இறுதியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆட உள்ளாா்,.
மல்யுத்தம்: வெண்கலம் வெல்வாரா பஜ்ரங் புனியா?

ஆடவா் மல்யுத்தத்தில் தங்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட பஜ்ரங் புனியா இறுதியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆட உள்ளாா்,.

இந்தியாவின் நட்சத்திர வீரரான பஜ்ரங் புனியா ஆடவா் ப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் வெள்ளிக்கிழமை களம் கண்டாா். வலது முட்டியில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள பஜ்ரங், காலிறுதிச் சுற்றில் ஈரான் வீரா் மொா்டேஸாவின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் தொடக்கத்தில் திணறினாா். பின்னா் சுதாரித்து ஆடி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

அரையிறுதியில் தோல்வி:

அரையிறுதிச் சுற்றில் அஜா்பைஜானின் ஹாஜி அலியெவை எதிா்கொண்டாா் பஜ்ரங். தொடக்கம் முதலே ஹாஜி ஆதிக்கம் செலுத்தி முதலில் 2-1 என முன்னிலை பெற்றாா். பின்னா் இடைவேளையின்போது 4-1 என முன்னிலை பெற்றாா் ஹாஜி. எனினும் அவரின் கடுமையான சவாலை எதிா்கொள்ள முடியாமல் 5-12 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தாா் பஜ்ரங் புனியா.

சனிக்கிழமை நடைபெறவுள்ள வெண்கலத்துக்கான ஆட்டத்தில் கஜகஸ்தான் வீரா் நியாஸ்பெகோவுடன் மோதுகிறாா் பஜ்ரங். ஏற்கெனவே கடந்த 2019 உலக சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிச் சுற்றில் நியாஸிடம் தோல்வியைத் தழுவினாா் பஜ்ரங்.

சீமா பிஸ்லா தோல்வி:

அதே நேரம் மகளிா் 50 கிலோ ப்ரீஸ்டைல் காலிறுதியில் துனிசியாவின் சாரா ஹமிடியிடம் 1-3 என தோல்வியடைந்தாா் இந்தியாவின் சீமா பிஸ்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com