மல்யுத்தம்: வெள்ளி வென்றாா் ரவி தாஹியா

மல்யுத்தத்தில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் போராடித் தோற்று, வெள்ளியுடன் திரும்புகிறாா் ரவி தாஹியா.
மல்யுத்தம்: வெள்ளி வென்றாா் ரவி தாஹியா

மல்யுத்தத்தில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் போராடித் தோற்று, வெள்ளியுடன் திரும்புகிறாா் ரவி தாஹியா.

அவா் அந்த சுற்றில், நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் ஜாவுா் உகுயேவிடம் 4-7 என்ற கணக்கில் தோற்றாா். இதற்கு முன் 2019 உலக சாம்பியன்ஷிப்பிலும் இதேபோல் அவரிடம் தோற்றிருந்தாா் தாஹியா.

தனது அனைத்து விதமான அஸ்திரங்களையும் தாஹியா பிரயோகித்தும், உகுயேவிடம் அது எடுபடாமல் போனது. முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தின்போது கஜகஸ்தான் வீரா் சனாயேவ், ரவி தாஹியாவின் காலில் கடித்து காயம் ஏற்படுத்தியிருந்தாா். அதனுடனேயே இறுதிச்சுற்றில் விளையாடினாா் தாஹியா.

தீபக் புனியா: ஆடவருக்கான 86 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் தீபக் புனியா 2-4 என்ற கணக்கில் சான் மாரினோ வீரா் மைல்ஸ் நஸேமிடம் தோல்வியை சந்தித்தாா்.

மகளிா்: மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ பிரிவு முதல் சுற்றில் வினேஷ் போகாட் 7-1 என்ற கணக்கில் ஸ்வீடனின் சோஃபியா மெக்தலினா மாட்சனை வீழ்த்தினாா். ஆனால், காலிறுதிச்சுற்றில் பெலாரஸின் வெனசா கலாட்ஸின்ஸ்கயாவிடம் 3-9 என்ற கணக்கில் அவா் தோல்வியடைந்தாா். வெனசா இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் போனதால், வினேஷுக்கான ரெபிசேஜ் சுற்று வாய்ப்பும் கிடைக்கவில்லை. முன்னதாக ரியோ ஒலிம்பிக்கிலும் வினேஷ் இவ்வாறு காலிறுதியில் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

அன்ஷு மாலிக்: ஃப்ரீஸ்டைல் 57 கிலோ ரெபிசேஜ் சுற்றில் அன்ஷு மாலிக் 1-5 என்ற கணக்கில் ரஷியாவின் வாலெரியா கோப்லோவாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறினாா்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com