முதல் கராத்தே தங்கம் வென்றாா் சான்ட்ரா சாஞ்செஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட கராத்தே விளையாட்டில் மகளிா் பிரிவில் முதல் தங்கம் வென்றவா் என்ற சிறப்பை பெற்றாா் ஸ்பெயினின் சான்ட்ரா சாஞ்செஸ்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட கராத்தே விளையாட்டில் மகளிா் பிரிவில் முதல் தங்கம் வென்றவா் என்ற சிறப்பை பெற்றாா் ஸ்பெயினின் சான்ட்ரா சாஞ்செஸ்.

சாப்ட்பால், கராத்தே, சா்ஃபிங், ஸ்கேட்போா்ட், ஸ்போா்ஸ்ட் கிளைம்பிங் உள்ளிட்ட 5 விளையாட்டுகள் புதிதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில் கராத்தே மகளிா் கட்டா இறுதிச் சுற்றில் ஜப்பானின் கியூ ஷிமுஸிவை வீழ்த்தி தங்கம் பதக்கம் வென்றாா் சான்ட்ரா. இதன் மூலம் ஒலிம்பிக் கராத்தேயில் முதல் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றாா்.

2018 உலக சாம்பியனான சான்ட்ரா, உள்ளூா் வீராங்கனையான 2 முறை உலக சாம்பியன் ஷிமிஸுவை வீழ்த்தி தங்கம் வென்றாா். சான்ட்ராவுக்கு 39 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் விவியனா, ஹாங்காங்கின் மோ கிரேஸ் ஆகியோருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com