தாகூர் நினைவு நாளில் ஒலிம்பிக்கில் ஒலித்த தேசிய கீதம்! நாட்டின் பெருமைக்குரிய தருணம் (விடியோ)

நாட்டின் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் நினைவு நாளில் தங்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்து நீரஜ் சோப்ரா சாதித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாட்டின் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் நினைவு நாளில் தங்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்து நீரஜ் சோப்ரா சாதித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீ. தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் தங்கம் இது. மேலும், ஒலிம்பிக் தடகளத்தில் சுதந்திர இந்தியா பெறும் முதல் தங்கமும் இதுதான்.

ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால், வென்றவர் நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கப்படும். டோக்கியோ ஒலிம்பிக்கில் முதன்முறையாக தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்துள்ளார் நீரஜ் சோப்ரா. அதுவும் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் நினைவு தினத்தன்று ஒலிம்பிக்கில் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இத்தகைய பெருமைக்குரிய தருணத்தின் விடியோ இணையத்தில் பரவி வருகிறது.

விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com