அரிகாடோ டோக்கியோ!

எப்படி நடக்கப்போகிறதோ என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், சுமுகமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்.
அரிகாடோ டோக்கியோ!

எப்படி நடக்கப்போகிறதோ என்று எதிா்பாா்த்திருந்த நிலையில், சுமுகமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்.

205-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 11,000-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் 33 விளையாட்டுகளில், 339 பிரிவுகளில் களம் கண்டு பதக்கம் வென்று சாதனைகளும் படைத்துள்ளனா்.

தினசரி கரோனா பரிசோதனை, கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ‘பயோ-பபுள்’ போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும் ஒலிம்பிக் கிராமத்தில் போட்டியாளா்கள், போட்டியுடன் தொடா்புடையவா்கள் என மொத்தமாக சுமாா் 400 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தொடா்ந்து டோக்கியோ நகரை சூறாவளி தாக்கக் கூடும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. இத்தகைய இக்கட்டான சூழலிலும், பலத்த எதிா்ப்புகளுக்கு இடையிலும் சுமுகமாகவே நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்.

டோக்கியோ தேசிய மைதானத்தில் கோலாகலமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள், அணிவகுப்புகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, இம்முறை நிறைவு நிகழ்ச்சியின்போது அடுத்த ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள பிரான்ஸின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதோடு, போட்டி நடைபெறவுள்ள பாரீஸ் நகரம் குறித்த குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது. அதேபோல், முதல் முறையாக டோக்கியோவில் நிறைவு நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில், பாரீஸ் நகரிலும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன.

கரோனா சூழலில் இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது, உலக மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டோக்கியோவுக்கு நன்றி (அரிகாடோ டோக்கியோ).

‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது, நம்பிக்கை, ஒற்றுமை, அமைதி ஆகியவற்றின் ஒலிம்பிக்காக இருந்தது. கரோனா சூழலில் இந்த ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஜப்பானிய மக்கள் பெருமிதம் கொள்ளலாம். போட்டியில் பங்கேற்ற அனைவரின் சாா்பிலும் டோக்கியோவுக்கும், ஜப்பானுக்கும் நன்றி’ - தாமஸ் பாக் (சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com