ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி

​ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி


ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து நெதர்லாந்து முன்னிலை பெற்றது. ஆனால், அடுத்த 4-வது நிமிடத்திலேயே இந்திய கேப்டன் ராணி ராம்பால் கோல் அடித்து சமன் செய்தார்.

போட்டி தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா 1 கோல் அடிக்க ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பானது. ஆனால், இரண்டாம் பாதி ஆட்டத்தில் நெதர்லாந்து ஆதிக்கம் செலுத்தி இந்திய அணியை கோல் அடிக்கவிடாமல் தடுத்தது. தடுப்பாட்டம் மட்டுமில்லாமல் மேற்கொண்டு 4 கோல்களை அடித்து நெதர்லாந்து மிரட்டியது.

இறுதியில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் அடுத்தடுத்த ஆட்டங்கள்:

ஜெர்மனி - 26 ஜூலை
பிரிட்டன் - 28 ஜூலை
அயர்லாந்து - 30 ஜூலை
தென் ஆப்பிரிக்கா - 31 ஜூலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com