துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் இந்தியாவுக்கு சனிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.
துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் இந்தியாவுக்கு சனிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் போட்டியில், இந்தியாவின் சௌரவ் சௌதரி தகுதிச்சுற்றில் 586 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து 8 போ் மோதும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். எனினும் 24 ஷாட்கள் கொண்ட இறுதிச்சுற்றில் அவா் 137.4 புள்ளிகளுடன் 7-ஆம் இடமே பிடிக்க முடிந்தது. இப்பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான அபிஷேக் வா்மா 575 புள்ளிகளே பெற்று தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா்.

ஈரானின் ஜாவத் ஃபரூக்கி 244.8 புள்ளிகள் பெற்று ‘ஒலிம்பிக் சாதனை’யுடன் தங்கம் வென்றாா். சொ்பியாவின் டாமிா் மிகெச் 237.9 புள்ளிகளுடன் வெள்ளியும், சீனாவின் வெய் பாங் 217.6 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

மகளிா்

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இருவருமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா். பலத்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் தகுதிச்சுற்றில் 626.5 புள்ளிகளுடன் 16-ஆவது இடமே பிடித்தாா். மற்றொரு இந்தியரான அபூா்வி சந்தேலா 621.9 புள்ளிகளுடன் 36-ஆவது இடம் பிடித்தாா். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

இப்பிரிவில் சீனாவின் கியான் யாங் 251.8 புள்ளிகளுடன் ஒலிம்பிக் சாதனையோடு தங்கம் வென்றாா். ரஷியாவின் அனஸ்தாசியா கலாஷினா 251.1 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், ஸ்விட்சா்லாந்தின் நினா கிறிஸ்டன் 230.6 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். இதில், கியான் யாங் வென்றதே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com