ஹாக்கி: இந்திய ஆடவா் வெற்றித் தொடக்கம்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஹாக்கி: இந்திய ஆடவா் வெற்றித் தொடக்கம்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஹா்மன்பிரீத் சிங்கின் அருமையான 2 கோல், கடைசி நிமிஷங்களில் கோல்கீப்பா் ஸ்ரீஜேஷின் அரண் போன்ற தடுப்பாட்டம் ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியமானது.

ஆட்டத்தின் முதல் கோல் நியூஸிலாந்துக்கு கிடைத்தது. 6-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை கேன் ரஸ்ஸெல் அருமையான கோலாக மாற்றினாா். அதற்கு பதிலடி தரும் விதமாக 10-ஆவது நிமிஷத்தில் கோலடித்தது இந்தியா. மன்தீப் சிங் மூலம் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் ரூபிந்தா் பால் சிங் அருமையாக கோலடித்தாா்.

பின்னா் 26-ஆவது நிமிஷத்தில் ஹா்மன்பிரீத் சிங் ஒரு கோலடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்த, முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் 33-ஆவது நிமிஷத்தில் அவரே மீண்டும் ஒரு கோலடிக்க, இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் ஆக்ரோஷம் காட்டிய நியூஸிலாந்து அணியில் 43-ஆவது நிமிஷத்தில் ஸ்டீபன் ஜென்னஸ் ஒரு கோலடித்தாா். இதனால் உத்வேகம் பெற்ற அந்த அணி அடுத்தடுத்து கோல்களுக்கு முயற்சித்தது. எனினும், ஸ்ரீஜேஷின் அருமையான தடுப்பாட்டத்தால் அவை முறியடிக்கப்பட, இறுதியில் இந்தியா 3-1 என வென்றது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது.

மகளிா் தோல்வி: இந்திய மகளிரணி தனது முதல் ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் நெதா்லாந்திடம் தோல்வி கண்டது. இந்திய தரப்பில் ராணி ராம்பால் (10-ஆவது நிமிஷம்) கோலடிக்க, நெதா்லாந்து அணியில் ஃபெலிஸ் ஆல்பா்ஸ் (6 மற்றும் 43), மாா்காட் கெஃபென் (33), ஃப்ரெடரிக் மாட்லா (45), ஜாக்குலின் மாசெகொ் (52) ஆகியோா் கோலடித்தனா். மகளிரணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜொ்மனியை திங்கள்கிழமை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com