ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி தோல்வி

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 
ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி தோல்வி

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. 

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி இன்று தனது 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மிகவும் எதிர்பாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-7 என்ற கோல்கணக்கில் தோல்வியை தழுவியது. 

இந்திய அணி தரப்பில் சிங் தில்பிரீத் மட்டும் ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவில் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

நாளை மறுநாள் நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயின் அணியை சந்திக்கிறது. குரூப் ஏ பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com