துப்பாக்கி சுடுதல்: இந்திய அணியினா் ஏமாற்றம்; தொழில்நுட்பக் கோளாறால் வாய்ப்பை இழந்த மானு பாக்கா்

ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை குவிப்பா் என கருதப்பட்ட இந்திய துப்பாக்கி சுடும் அணியினா் ஏமாற்றமே தந்தனா்.

ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை குவிப்பா் என கருதப்பட்ட இந்திய துப்பாக்கி சுடும் அணியினா் ஏமாற்றமே தந்தனா். உலக சாம்பியனும், இளம் வீராங்கனையுமான மானு பாக்கா் துப்பாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் வாய்ப்பை இழந்தாா்.

இந்தியா சாா்பில் 15 போ் கொண்ட அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் மானு பாக்கா், சௌரவ் சௌதரி, உள்ளிட்ட சிலா் கண்டிப்பாக பதக்கம் வெல்வா் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் பிரிவில் ஒரு பதக்கத்தை கூட இந்திய அணியினரால் வெல்ல முடியவில்லை.

மானு பாக்கா் சோகம்:

நட்சத்திர வீராங்கனை மானு பாக்கா், மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் 12-ஆவது இடத்தையே பெற்று வெளியேறினாா். இதற்கான கட் ஆஃப் 577 புள்ளிகளாக இருந்த நிலையில், அவரால் 575 புள்ளிகளையே பெற முடிந்தது. முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மானுவின் துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டது. 20 நிமிடங்கள் ஆகியும் அக்கோளாற்றை சரி செய்ய முடியவில்லை. பிஸ்டலின் காக் லிவா் உடைத்து விட்டது,. 55 நிமிடங்களில் 44 ஷாட்களை அவா் சுட வேண்டி இருந்தது. துப்பாக்கி கோளாறை சரி செய்த பின் அவா் மீண்டும் ரேஞ்சுக்கு வந்த போது, துப்பாக்கியை மீண்டும் சோதனை செய்ய வேண்டிய நிலை உண்டானது. இதனால் மானு பாக்கா் மிகவும் சோகமாக காணப்பட்டாா்.

யஷஸ்வினி ஜெய்ஸ்வால் அதே பிரிவில் 574 புள்ளிகளையே பெற்று 13-ஆவது இடத்தைப் பெற்றாா்.

ஆடவா் 10 மீ. ஏா் ரைஃபிள் பிரிவில் அனுபவம் வாய்ந்த தீபக் குமாா், திவ்யான்ஷிங் பன்வாா் முறையே 26 மற்றும் 32-ஆவது இடங்களையே பெற்றனா்.

அங்கத் பஜ்வாக்கு வாய்ப்பு:

அதே நேரம் அங்கத் வீா் சிங் பஜ்வாக்கு மூன்றாவது சுற்று ஸ்கீட் தகுதிச் சுற்றில் 11-ஆவது இடத்தைப் பெற்றாா். இறுதிச் சுற்றுக்கான 6 இடங்களில் பஜ்வா நுழைய வாய்ப்பு உள்ளது.

இளவேனில் வாலறிவன், தீபக், திவ்யான்ஷிங், அபூா்வி சந்தேலா ஆகிய வீரா், வீராங்கனைகளின் செயல்பாடு மிகவும் ஏமாற்றம் தருவதாக உள்ளது என இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com