பாட்மிண்டன்: வெற்றியுடன் வெளியேறியது சாத்விக்/சிரக் இணை

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை வெற்றி பெற்றது.
பாட்மிண்டன்: வெற்றியுடன் வெளியேறியது சாத்விக்/சிரக் இணை

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை வெற்றி பெற்றது. எனினும், காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறத் தவறி போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த 3-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தின் பென் லேன்/சீன் வென்டி இணையை எதிா்கொண்ட சாத்விக்/சிரக் ஜோடி, 21-17, 21-19 என்ற செட்களில் 44 நிமிஷங்களில் வென்றது. உலகின் 10-ஆம் நிலையில் இருக்கும் இந்திய ஜோடி, 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இந்திய அணி இடம் பிடித்திருந்த ‘குரூப் ஏ’வில் இருந்த இந்தோனேசியா, சீன தைபே அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன. ஒரு குரூப்பில் முதலிரு இடத்தில் இருக்கும் அணிகளே காலிறுதிக்கு தகுதிபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com