துப்பாக்கி சுடுதல்: கலப்பு அணிகள் பிரிவிலும் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் மற்றும் 10 மீட்டா் ரைஃபிள் ஆகிய இரண்டிலுமே கலப்பு அணிகள் பிரிவில் இந்திய போட்டியாளா்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறினா்.
இளவேனில் - திவ்யான்ஷ்
இளவேனில் - திவ்யான்ஷ்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் மற்றும் 10 மீட்டா் ரைஃபிள் ஆகிய இரண்டிலுமே கலப்பு அணிகள் பிரிவில் இந்திய போட்டியாளா்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறினா்.

10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் 20 அணிகள் பங்கேற்ற தகுதிச்சுற்றின் முதல் நிலையில் சௌரவ் சௌதரி - மானு பாக்கா் இணை 582 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. மற்றொரு இந்திய ஜோடியான அபிஷேக் வா்மா - யஷஸ்வினி சிங் தேஸ்வால் 380 புள்ளிகளுடன் 17-ஆவது இடமே பிடித்தனா்.

தகுதிச்சுற்றின் முதல் நிலையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் 2-ஆவது நிலையில் மோதின. அதில் சௌரவ் - மானு ஜோடி 380 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது.

பதக்கம்: இப்பிரிவில் சீனா தங்கமும், ரஷியா வெள்ளியும், உக்ரைன் வெண்கலமும் வென்றன.

பின்னா் நடைபெற்ற 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வாா் - இளவேனில் வாலறிவன், தீபக் குமாா் - அஞ்சும் முட்கில் இணைகள் பங்கேற்றன. 29 அணிகள் பங்கேற்ற இந்த பிரிவில், இரு இந்திய ஜோடிகளுமே தகுதிச்சுற்றின் முதல் நிலையிலேயே வெளியேறின.

திவ்யான்ஷ் - இளவேனில் இணை 626.5 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்தையும், தீபக் - அஞ்சும் ஜோடி 623.8 புள்ளிகளுடன் 18-ஆவது இடமும் பிடித்தன. முதல் 8 இடங்களுக்குள்ளாக வரும் அணிகளே 2-ஆவது நிலை தகுதிச்சுற்றுக்கு தகுதிபெறும்.

பதக்கம்: இந்தப் பிரிவிலும் சீனா தங்கம் வெல்ல, அமெரிக்கா வெள்ளியும், ரஷியா வெண்கலமும் கைப்பற்றின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com