நீச்சல்: வரலாறு படைத்தது இங்கிலாந்து

நீச்சல் போட்டியில் ஆடவருக்கான 4*200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இங்கிலாந்து தங்கம் வென்றது.
நீச்சல்: வரலாறு படைத்தது இங்கிலாந்து


நீச்சல் போட்டியில் ஆடவருக்கான 4*200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இங்கிலாந்து தங்கம் வென்றது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் ஒலிம்பிக் நீச்சலில் இங்கிலாந்து தங்கம் வென்றது இது முதல் முறையாகும். 
அந்நாட்டின் டாம் டீன், டன்கன் ஸ்காட், ஜேம்ஸ் கை, மேத்தியூ ரிச்சர்ட்ஸ் ஆகியோர் கூட்டணி 6 நிமிஷம் 58.58 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது. ரஷியா 7 நிமிஷம் 1.81 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளியும், ஆஸ்திரேலியா 7 நிமிஷம் 1.84 விநாடிகளில் வந்து வெண்கலமும் வென்றன. வழக்கமாக இந்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் அமெரிக்கா 4-ஆம் இடமே பிடித்தது. 
இதற்கு முன் 1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்ஸில் மகளிருக்கான 4*200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இங்கிலாந்து மகளிர் அணி தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
லெடக்கிக்கு தங்கம்: அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான கேட்டி லெடக்கி, மகளிருக்கான 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் தங்கம் வென்றார். சக நாட்டவர் எரிகா சல்லிவன் வெள்ளியும், ஜெர்மனியின் சாரா கோலர் வெண்கலமும் கைப்பற்றினர். ஒலிம்பிக்கில் இந்தப் பிரிவில் லெடக்கிக்கு இது முதல் தங்கமாகும். இத்துடன் ஒலிம்பிக்கில் அவர் 6 தங்கம், 2 வெள்ளி என 8 பதக்கங்கள் 
வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com