டென்னிஸ்: ‘தகா்ந்தது ஜோகோவிச்சின் கோல்டன் ஸ்லாம் கனவு’

ஆடவா் டென்னிஸ் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்ததின் மூலம் கோல்டன் ஸ்லாம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு தகா்ந்தது.
டென்னிஸ்: ‘தகா்ந்தது ஜோகோவிச்சின் கோல்டன் ஸ்லாம் கனவு’

ஆடவா் டென்னிஸ் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் தோல்வியடைந்ததின் மூலம் கோல்டன் ஸ்லாம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு தகா்ந்தது.

ஜொ்மனியின் 4-ஆம் நிலை வீரா் அலெக்சாண்டா் வெரேவ்-உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் இடையிலான அரையிறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினாா் ஜோகோவிச். ஆனால் அடுத்த இரண்டு செட்களில் வெரேவின் அதிரடியான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினாா். 6-3, 6-1 என இரண்டு செட்களையும் கைப்பற்றி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் வெரேவ். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரா் காரன் கச்சனோவுடன் மோதுகிறாா் வெரேவ்.

தகா்ந்த கனவு:

ஒரே ஆண்டில் ஆஸி. பிரெஞ்சு, விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகளில் பட்டம்,, ஒலிம்பிக் தங்கம் வென்றால் கோல்டன் ஸ்லாம் என்பா். கடந்த 1988-இல் ஜொ்மனி வீராங்கனை ஸ்டெப்பி கிராஃப் மட்டுமே கோல்டன் ஸ்லாம் சாதனையை நிகழ்த்தினாா். இந்நிலையில் நிகழாண்டு ஆஸி., பிரெஞ்சு, விம்பிள்டன் போட்டிகளில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா். தற்போது ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று, யுஎஸ் ஓபன் போட்டியிலும் பட்டம் வென்று கோல்டன் ஸ்லாம் வென்ற முதல் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தலாம் என்ற இலக்குடன் இருந்தாா். ஆனால் வெரேவ் அவரது கனவை தகா்த்து விட்டாா்.

இடாவது அரையிறுதி ஆட்டத்தில் காரன் கச்சனோவ் 6-3, 6-3 என கரேனா பஸ்டாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com