முதல் டி20-யில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா படைத்த சாதனைகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.
முதல் டி20-யில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா படைத்த சாதனைகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதில் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் செவ்வாய்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. மான்சஸ்டரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 69 ரன்கள் சேர்த்தார்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 200 ரன்களை எளிதில் கடக்கும் என்ற நிலையில் இருந்தபோது இந்திய அணியின் சைனாமேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. துவக்க வீரர் ராகுல், அதிரடியாக ஆடி 54 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இப்போட்டியில் இந்திய அணி சில சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

டி20 ஆட்டத்தில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளும், சதமும் அடித்த அணிகள்:

  • மார்னி வேன் விக் (114*), டேவிட் வீஸ் (5/23) - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டர்பனில் 2015-ல் எடுத்தனர்
  • கே.எல்.ராகுல் (101*), குல்தீப் யாதவ் (5/24) - இங்கிலாந்துக்கு எதிராக  மான்சஸ்டரில் 2018-ல் எடுத்தனர்

டி20 போட்டிகளில் சதமடித்த இந்திய வீரர்கள்:

  • 118 ரோஹித் ஷர்மா v இலங்கை, இந்தூர், 2017
  • 110* கே.எல்.ராகுல் v மே.இ.தீவுகள், லௌடர்ஹில், 2016
  • 106 ரோஹித் ஷர்மா v தென் ஆப்பிரிக்கா, தரம்சாலா, 2015
  • 101 சுரேஷ் ரெய்னா v தென் ஆப்பிரிக்கா, கிராஸ் இஸ்லெட், 2010
  • 101* கே.எல்.ராகுல் v இங்கிலாந்து, மான்சஸ்டர், 2018

ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு டி20 ஆட்டங்களில் சதமடித்த வீரர்கள் (இதில் 2 முறையும் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார்):

  • 27 ஆகஸ்ட் 2016: இவன் லீவிஸ் (100) & கே.எல்.ராகுல் (110*)
  • 03 ஜூலை 2018: ஆரோன் பிஞ்ச் (172) & கே.எல்.ராகுல் (101*)

இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 அரங்கில் 1,000 ரன்களையும் (27 இன்னிங்ஸ்), 2,000 ரன்களையும் (56 இன்னிங்ஸ்) அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களைக் கடக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட இன்னிங்ஸ்களின் அடிப்படையில்:

  • 56 இன்னிங்ஸ் - விராட் கோலி
  • 66 இன்னிங்ஸ் - பிரண்டன் மெக்கல்லம்
  • 68 இன்னிங்ஸ் - மார்டின் கப்டில்
  • 92 இன்னிங்ஸ் - சோயிப் மாலிக்

இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி, அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் (91 போட்டிகளில் 33 ஸ்டம்பிங்குகள்) என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் அதிக கேட்சுகள் (49 கேட்சுகள்) பிடித்த விக்கெட் கீப்பர்களிலும் முதலிடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர்கள்:

  • 33 - மகேந்திர சிங் தோனி
  • 32 - கே.அக்மல்
  • 28 - எம்.ஷாசாத்
  • 26 - எம்.ரஹீம்
  • 20 - குமார சங்ககாரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com