ஹாட்ரிக் சதமடித்த வார்னர், பேர்ஸ்டோ ஜோடி படைத்த சாதனைகள்!

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிய இப்போட்டியில் பல அரிய சாதனைகள் படைக்கப்பட்டன.
ஹாட்ரிக் சதமடித்த வார்னர், பேர்ஸ்டோ ஜோடி படைத்த சாதனைகள்!

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட் செய்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 100*, ஜானி பேர்ஸ்டோ 114 ரன்கள் விளாசினர்.

பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு சுருண்டு 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் பல அரிய சாதனைகள் படைக்கப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:

ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோரை விட குறைவாக எடுக்கப்பட்ட எதிரணியின் மொத்த ரன்கள்:

  • 133 புணே வாரியர்ஸ் இந்தியா vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (கிறிஸ் கெயில் 175*), பெங்களூரு, 2013
  • 113 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு v சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் (ஜானி பேர்ஸ்டோ 114), ஹைதராபாத், 2019*
  • 104 குஜராத் லயன்ஸ் v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஏபி டி வில்லியர்ஸ் 129*; விராட் கோலி 109), பெங்களூரு, 2016

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிக ரன்கள் வித்தியாச தோல்விகள்:

  • 140 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு, 2008
  • 118 vs சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத், 2019 *
  • 111 vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், தரம்சாலா, 2011

ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு:

  • 5/19 புவனேஸ்வர் குமார் v கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஹைதராபாத், 2017
  • 4/11 முகமது நபி v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2019 *
  • 4/14 புவனேஸ்வர் குமார் v ராஜஸ்தான் ராயல்ஸ், ஆமதாபாத், 2014
  • 4/19 அமித் மிஸ்ரா v புணே வாரியர்ஸ் இந்தியா, புணே, 2013

ஐபிஎல் தொடரில் அதிக முறை விராட் கோலியை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

  • 6 ஆசிஷ் நெஹ்ரா/ சந்தீப் ஷர்மா
  • 4 தவல் குல்கர்னி/ மிட்செல் மெக்லனகன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக குவிக்கப்பட்ட 2-ஆவது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முன்னதாக, 2011-ஆம் ஆண்டு தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிக சதமடித்த பேட்ஸ்மேன்கள்:

  • 6 கிறிஸ் கெயில்
  • 4 விராட் கோலி/ ஷேன் வாட்சன்/ டேவிட் வார்னர்
  • 3 ஏபி டி வில்லியர்ஸ்

டி20 கிரிக்கெட்டின் ஒரு போட்டியில் இரு வீரர்கள் சதமடித்த தருணங்கள்:

  • கெவின் ஓ'பிரையன்/ ஹாமிஷ் மார்ஷல், கிளௌஷையர் v மிடில்செக்ஸ், அக்ஸ்பிரிட்ஜ், 2011
  • விராட் கோலி /ஏபி டி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு v குஜராத் லயன்ஸ், பெங்களூரு, 2016
  • அலெக்ஸ் ஹேல்ஸ்/ ரைலி ரூஸோ, ஆர் ரைடர்ஸ் v சி வைகிங்ஸ், சட்டோகிராம், 2019
  • டேவிட் வார்னர்/ ஜானி பேர்ஸ்டோ, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2019

ஐபிஎல் தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்:

  • 210 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத், 2019 *
  • 209 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், 2017
  • 208 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு, 2016
  • 207 vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், மொஹாலி, 2017
  • 207 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத், 2017

ஐபிஎல் தொடரில் அதிகபட்ச முதல் விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்:

  • 185* டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத், 2019
  • 184* கௌதம் கம்பீர் - கிறிஸ் லின், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் v குஜராத் லயன்ஸ், ராஜ்கோட், 2017
  • 167 கிறிஸ் கெயில் - திலகரத்ன தில்ஷன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு v புணே வாரியர்ஸ் இந்தியா, பெங்களூரு, 2013
  • 163* சச்சின் டெண்டுல்கர் - டுவைன் ஸ்மித் v ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர், 2012

ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி குறைந்த இன்னிங்ஸ்களில் சதமடித்த வீரர்கள்:

  • 1 பிரண்டன் மெக்கல்லம்/ மைக் ஹஸி
  • 3 ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்/ ஜானி பேர்ஸ்டோ
  • 4 ஆடம் கில்கிறிஸ்ட்/ மணீஷ் பாண்டே/ பால் வால்தாட்டி
  • 5 லெண்டல் சிம்மன்ஸ்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்:

  • 185 டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத், 2019*
  • 138 டேவிட் வார்னர்  - ஷிகர் தவன் v கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், 2017
  • 137* டேவிட் வார்னர்  - ஷிகர் தவன் v குஜராத் லயன்ஸ், ராஜ்கோட், 2016
  • 130 டேவிட் வார்னர்  - ஷிகர் தவன் v கொல்கத்தா நைட் ரைடர்ஸ், விசாகப்பட்டினம், 2015

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3 முறை பார்ட்னர்ஷிப்பில் ஹாட்ரிக் சதமடித்த ஜோடி என்ற பெருமையை டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஜோடி பெற்றது.

  • 118 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
  • 110 vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்
  • 185 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஹைதராபாத்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய டேவிட் வார்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக எடுத்த ரன்கள்:

  • 100(55)
  • 61(49)
  • 59(46)
  • 57(27)
  • 58(25)
  • 92(50)
  • 69(38)
  • 14(8)

ஐபிஎல் தொடரில் இளம் வயதில் களமிறங்கிய வீரர்கள்:

  • 16 வருடம் 157 நாட்கள் - பிரையஸ் ரே பார்மன்
  • 17 வருடம் 011 நாட்கள் - முஜீப்-உர்-ரஹ்மான்
  • 17 வருடம் 177 நாட்கள் - சர்ஃப்ராஸ் கான்
  • 17 வருடம் 179 நாட்கள் - பிரதீப் சங்வான்
  • 17 வருடம் 199 நாட்கள் - வாஷிங்டன் சுந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com