2019-ன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி!

2019-ஆம் ஆண்டின் சிறந்த விளையாடும் லெவன் ஒருநாள் கிரிக்கெட் அணியை தினமணி இணையதளம் தேர்வு செய்துள்ளது.
2019-ன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி!


2019-ஆம் ஆண்டின் சிறந்த விளையாடும் லெவன் ஒருநாள் கிரிக்கெட் அணியை தினமணி இணையதளம் தேர்வு செய்துள்ளது.

2019-ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு மறக்க முடியாக ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில்தான் இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான உலகக்கோப்பை நடைபெற்றது. இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறின. யாருமே எதிர்பாராத வகையில் இந்த ஆட்டம் டை ஆக ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத உலகக்கோப்பையாக அமைந்தது. இதன்பிறகு, சூப்பர் ஓவரும் டை ஆக அதிக பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வென்றது. 

ஒரு பக்கம் இங்கிலாந்து கோப்பை வென்று கொண்டாட, மறுபக்கம் நியூஸிலாந்து நிலையை எண்ணி பலர் வருத்தம் கொண்டனர். அதேசமயம், ஐசிசியின் இந்த விதி பலருக்கு சர்ச்சையாகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து பின்னாளில் அந்த விதி ஐசிசியால் நீக்கப்பட்டது. இப்படி பல மறக்க முடியாத முக்கியமான நினைவுகளை 2019-ஆம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு அளித்துள்ளது.

இந்த முக்கியமான ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தினமணி இணையதளம் தேர்வு செய்துள்ளது. பேட்டிங்கில் அதிக ரன்களையும், பந்துவீச்சில் அதிக விக்கெட்டுகளையும் மட்டுமே கணக்கில் கொள்ளாமல் இந்த ஆண்டில் அவர்களுடைய ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு இந்த சிறந்த லெவன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டின் சிறந்த அணி:

1. ரோஹித் சர்மா

2. ஜேசன் ராய்

3. விராட் கோலி

4. கேன் வில்லியம்ஸன் (கேப்டன்)

5. பாபர் அஸாம்

6. பென் ஸ்டோக்ஸ்

7. ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்)

8. மிட்செல் ஸ்டார்க்

9. பாட் கம்மின்ஸ்

10. முகமது ஷமி

11. யுஸ்வேந்திர சாஹல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com