வெளிநாடுகளில் ஒரு கேப்டனாக விராட் கோலியின் சாதனை என்ன?

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்...
வெளிநாடுகளில் ஒரு கேப்டனாக விராட் கோலியின் சாதனை என்ன?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியை அடைந்தாலும் வெளிநாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட கேப்டனாக உள்ளார் விராட் கோலி. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் கேப்டன்களில் தோனிக்கு அடுத்ததாக அதிக டெஸ்டுகளுக்கு கேப்டனாக உள்ளார் கோலி. 2008-14 வரை 60 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்த தோனி, 27 வெற்றிகளையும் 18 தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளார். வெற்றி விகிதம் 45%.

2014 முதல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக உள்ள கோலி, இதுவரை 56 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதில் 33 வெற்றிகளையும் 13 தோல்விகளையும் சந்தித்துள்ளார். வெற்றி விகிதம் 58.92%. கங்குலி 49 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்து, 21 வெற்றிகளையும் 13 தோல்விகளையும் சந்தித்துள்ளார். வெற்றி விகிதம் 42.85%. 

அதிக டெஸ்டுகளில் கேப்டனாக இருந்த இந்தியர்கள்

தோனி - 60 டெஸ்டுகள், 27 வெற்றிகள், 18 தோல்விகள்
கோலி - 56 டெஸ்டுகள், 33 வெற்றிகள், 13 தோல்விகள்
கங்குலி - 49 டெஸ்டுகள், 21 வெற்றிகள், 13 தோல்விகள்

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 30 டெஸ்டுகள், 13 வெற்றிகள், 12 தோல்விகள், 5 டிராக்கள்
கங்குலி - 28 டெஸ்டுகள், 11 வெற்றிகள், 10 தோல்விகள், 7 டிராக்கள்
தோனி - 30 டெஸ்டுகள், 6 வெற்றிகள், 15 தோல்விகள், 9 டிராக்கள்

கேப்டன் கோலியின் டெஸ்ட் வெற்றிகள்

இந்தியாவில்: 26 டெஸ்டுகளில் 20 வெற்றிகள்
வெளிநாடுகளில்: 30 டெஸ்டுகளில் 13 வெற்றிகள்

கேப்டன் கோலியின் வெளிநாட்டு வெற்றிகள்

இலங்கையில் - 5 வெற்றிகள்
மேற்கிந்தியத் தீவுகளில் - 4 வெற்றிகள்
ஆஸ்திரேலியா - 2
தென் ஆப்பிரிக்கா - 1
இங்கிலாந்து - 1
நியூசிலாந்து - 0

ஆஸ்திரேலியாவில் தோனி & கோலி

ஆஸ்திரேலியாவில் தோனி - 5 டெஸ்டுகள், 0 வெற்றி, 1 டிரா, 4 தோல்விகள்
ஆஸ்திரேலியாவில் கோலி - 7 டெஸ்டுகள், 2 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com