60 டெஸ்டுகளில் 36 வெற்றிகள்: கேப்டனாகவும் சாதித்து வரும் விராட் கோலி!

ஒரு சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டனாகவும் இருப்பது இந்திய அணிக்குப் பெரிய பலமாக உள்ளது.
60 டெஸ்டுகளில் 36 வெற்றிகள்: கேப்டனாகவும் சாதித்து வரும் விராட் கோலி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது. 

இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கியவர்கள் என்கிற பெருமை கோலி மற்றும் தோனி வசம் உள்ளது. இருவரும் 60 டெஸ்டுகளுக்கு கேப்டன்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.  எனினும் தோனியை விடவும் கோலி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளார். தோனிக்கு 27 வெற்றிகள், கோலிக்கு 36 வெற்றிகள். இதன்மூலம் இந்திய கிரிக்கெட்டில் தன்னை ஒரு மகத்தான கேப்டனாகவும் நிரூபித்துள்ளார் கோலி. ஒரு சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டனாகவும் இருப்பது இந்திய அணிக்குப் பெரிய பலமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் இங்கிலாந்தையும் தோற்கடித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் ஒரு கேப்டனாக மேலும் பல சாதனைகளை கோலி நிகழ்த்துவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. 

கேப்டன் கோலியின் சாதனைகள்

அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 60 டெஸ்டுகள், 36 வெற்றிகள், 14 தோல்விகள்
தோனி - 60 டெஸ்டுகள், 27 வெற்றிகள், 18 தோல்விகள்
கங்குலி - 49 டெஸ்டுகள், 21 வெற்றிகள், 13 தோல்விகள்

வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 30 டெஸ்டுகள், 13 வெற்றிகள், 12 தோல்விகள், 5 டிராக்கள்
கங்குலி - 28 டெஸ்டுகள், 11 வெற்றிகள், 10 தோல்விகள், 7 டிராக்கள்
தோனி - 30 டெஸ்டுகள், 6 வெற்றிகள், 15 தோல்விகள், 9 டிராக்கள்

சேனா (SENA, South Africa, England, New Zealand & Australia) நாடுகளில் அதிக வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 15 டெஸ்டுகள் - 4 வெற்றிகள் - 10 தோல்விகள் - 2 டிராக்கள்
தோனி - 23 டெஸ்டுகள் - 3 வெற்றிகள் - 14 தோல்விகள் - 6 டிராக்கள்
டிராவிட் - 6 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 2 தோல்விகள் - 2 டிராக்கள்
கங்குலி - 12 டெஸ்டுகள் - 2 வெற்றிகள் - 5 தோல்விகள் - 5 டிராக்கள்

கேப்டன் கோலியின் டெஸ்ட் வெற்றிகள்

இந்தியாவில்: 30 டெஸ்டுகளில் 23 வெற்றிகள்
வெளிநாடுகளில்: 30 டெஸ்டுகளில் 13 வெற்றிகள்

கேப்டன் கோலியின் வெளிநாட்டு வெற்றிகள்

இலங்கையில் - 5 வெற்றிகள்
மேற்கிந்தியத் தீவுகளில் - 4 வெற்றிகள்
ஆஸ்திரேலியா - 2
தென் ஆப்பிரிக்கா - 1
இங்கிலாந்து - 1
நியூசிலாந்து - 0

ஆஸ்திரேலியாவில் தோனி & கோலி

ஆஸ்திரேலியாவில் கோலி - 7 டெஸ்டுகள், 2 வெற்றி, 2 டிரா, 3 தோல்விகள்
ஆஸ்திரேலியாவில் தோனி - 5 டெஸ்டுகள், 0 வெற்றி, 1 டிரா, 4 தோல்விகள்

சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைக் கண்ட கேப்டன்கள்

கிரீம் ஸ்மித் - 30 வெற்றிகள் (53 டெஸ்டுகளில்)
பாண்டிங் - 29 வெற்றிகள் (39 டெஸ்டுகளில்)
கோலி - 23 வெற்றிகள் (30 டெஸ்டுகளில்)
ஸ்டீவ் வாஹ் - 22 வெற்றிகள் (29 டெஸ்டுகள்)

அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட கேப்டன்கள்

கிரீம் ஸ்மித் - 53 வெற்றிகள் (109 டெஸ்டுகளில்)
பாண்டிங் - 48 வெற்றிகள் (77 டெஸ்டுகளில்)
ஸ்டீவ் வாஹ் - 41 வெற்றிகள் (57 டெஸ்டுகளில்)
கோலி - 36 வெற்றிகள் (60 டெஸ்டுகளில்)
லாயிட் - 36 வெற்றிகள் (74 டெஸ்டுகளில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com