ஒலிம்பிக்: உசேன் போல்ட் பங்கேற்கும் போட்டிகளின் நேரம்! 

ஆடவருக்கு 24 பிரிவுகளிலும், மகளிருக்கு 23 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. தடகளத்தில் 47 தங்கம், 47 வெள்ளி, 47 வெண்கலம் என மொத்தம் 141 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
ஒலிம்பிக்: உசேன் போல்ட் பங்கேற்கும் போட்டிகளின் நேரம்! 

வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு மற்றும் புதிய சாதனைகளுக்குப் பஞ்சமில்லாத ஒலிம்பிக் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

ஒலிம்பிக்கில் மற்ற போட்டிகளைவிட தடகளப் போட்டிகளுக்குத்தான் எப்போதுமே முக்கியத்துவம் அதிகம். ரியோ டி ஜெனீரோவில் உள்ள ஜுவா ஹாவேலாஞ்சே மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகள், ஒலிம்பிக்கின் கடைசி நாளான 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதில் ஆடவருக்கு 24 பிரிவுகளிலும், மகளிருக்கு 23 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. தடகளத்தில் 47 தங்கம், 47 வெள்ளி, 47 வெண்கலம் என மொத்தம் 141 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

கடந்த ஒலிம்பிக்கைப் போலவே இந்த ஒலிம்பிக்கிலும் உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஆடவர் 100 மீ., 200 மீ. ஓட்டம் மற்றும் 4ல100 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றுள்ள போல்ட், இந்த முறையும் மேற்கண்ட மூன்றிலும் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பதில் தீவிரமாக உள்ளார். மேற்கண்ட 3 போட்டிகளிலும் உலக சாதனையும் போல்ட் வசமே உள்ளது.

ஆடவர் 100 மீ. ஓட்டத்தைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் உசேன் போல்டுக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார். இந்த ஆண்டின் "ஃபாஸ்டஸ்ட் டைம்' (9.80 விநாடிகளில் இலக்கை எட்டியது) கேட்லின் வசமே உள்ளது. ஆனால் உலக சாதனைக்கு (9.58 விநாடிகள்) சொந்தக்காரரான போல்ட்டை கேட்லின் வீழ்த்துவாரா என்பதற்கு திங்கள்கிழமை மாலையில் பதில் கிடைத்துவிடும். ஆடவர் 200 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் லாசன் மெரிட், உசேன் போல்ட்டுக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லாசன் மெரிட், இந்த ஆண்டில் 19.74 விநாடிகளில் இலக்கை எட்டியுள்ளார். இதுதவிர 3 முறை 19.80 விநாடிகளில் இலக்கை எட்டியிருக்கிறார். ஆனால் உசேன் போல்ட் தனது உலக சாதனையை (19.19 விநாடிகள்) முறியடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் வெல்வது யார் என்பது வெள்ளிக்கிழமை இரவு தெரிந்துவிடும். இதுவே உசேன் போல்ட் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் என்பது குறிப்பிடத்தக்கது.


உசேன் போல்ட் பங்கேற்கும் போட்டிகளின் நேரம் (IST)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com