Enable Javscript for better performance
பேட்டிங்கில் சாதனை செய்த அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ்!- Dinamani

சுடச்சுட

    

    பேட்டிங்கில் சாதனை செய்த அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ்!

    By DIN  |   Published on : 28th November 2016 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ashwin876

     

    மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள். 

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோரின் அபாரமான அரை சதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 417 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

    இதற்கு முன்பு, 6, 7, 8 ஆகிய நிலைகளில் ஆடிய மூன்று இந்திய பேட்ஸ்மேன்களும் ஒரே இன்னிங்ஸில் அரை சதம் எடுத்தது கிடையாது. முதல்முறையாக இந்திய அளவில் இந்தச் சாதனையைச் செய்து அசத்தியுள்ளார்கள் அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் ஆகிய மூவரும்.  உலக அளவில் 7-வது முறையாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அஸ்வின் 72, ஜடேஜா 90, ஜெயந்த் 55 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு வலுவான நிலையை மொஹாலி டெஸ்ட் போட்டியில் அமைத்துக்கொடுத்துள்ளார்கள். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai