Enable Javscript for better performance
ஹாங்காங் ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து, சமீர் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி கண்டனர்.
    ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் சிந்து 15-21, 17-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் தாய் சூ இங்கிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் தாய் சூ இங்.
    கடந்த வாரம் சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து, ஹாங்காங் ஓபனிலும் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இறுதிச்சுற்றில் தோற்றதால் தொடர்ந்து 2-ஆவது முறையாக சூப்பர் சீரிஸ் போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
    ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா
    14-21, 21-10, 11-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லாங் ஆக்னஸிடம் தோல்வி கண்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai