Enable Javscript for better performance
உலகக் கோப்பை கபடி: இந்தியா அதிர்ச்சித் தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    உலகக் கோப்பை கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா 32-34 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
    12 நாடுகள் பங்கேற்றுள்ள உலகக் கோப்பை கபடிப் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதின.
    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா 24-19 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் பின்னர் அபாரமாக ஆடிய தென் கொரியா மெதுவாக சரிவிலிருந்து மீண்டதோடு 34-32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. இந்திய அணியில் "ரைடர்'களின் செயல்பாடு மோசமாக அமைந்தது. அவர்கள் மூலம் 17 புள்ளிகள் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai