Enable Javscript for better performance
ஐஎஸ்எல்: மும்பைக்கு 2-ஆவது வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    vb

    பெனால்டி வாய்ப்பில் கோலடிக்கிறார் டீகோ ஃபோர்லான்.

    இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியைத் தோற்கடித்தது.
    இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது.
    மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும், நார்த் ஈஸ்ட் அணி 4-1-4-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 11-ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை நார்த் ஈஸ்ட் அணி வீணடிக்க, 13-ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை மும்பை அணி கோட்டைவிட்டது.
    முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிய, 2-ஆவது பாதி ஆட்டத்தின் 55-ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் வீரர் ரீகன் சிங், மும்பை வீரர் பிரணாய் ஹால்டரை கீழே தள்ள, மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மும்பை ஸ்டிரைக்கர் டீகோ ஃபோர்லான் கோலடித்தார்.
    இதன்பிறகு ஸ்கோரை சமன் செய்ய நார்த் ஈஸ்ட் அணி கடுமையாகப் போராடியபோதும், அதற்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இதனால் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

    இன்றைய ஆட்டம்


    கோவா-புணே
    இடம்: ஃபட்ரோடா
    நேரம்: இரவு 7
    நேரடி ஒளிபரப்பு:
    ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai