Enable Javscript for better performance
சர்வதேச செஸ்: ஆனந்துக்கு 3-ஆவது இடம்- Dinamani

சுடச்சுட

    
    anand

    தால் நினைவு சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 9-ஆவது மற்றும் கடைசி சுற்றில் ஆனந்த், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தார். இதன்மூலம் இந்தத் தொடரில் 6-ஆவது டிராவைப் பதிவு செய்தார் ஆனந்த்.
    ரஷியாவின் இயான் நெபோம்நியாக்ஷி, இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டுடன் டிரா செய்தார். இதன்மூலம் நெபோம்நியாக்ஷி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
    இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நெதர்லாந்தின் அனிஷ் கிரி, தனது கடைசிச் சுற்றில் சீனாவின் லீ சாவுடன் டிரா செய்தார். இதனால் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட கிரி, 5.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தார்.
    ஆனந்த், லெவோன் ஆரோனியன் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தையும், ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக், பீட்டர் ஸ்விட்லர், அஜர்பைஜானின் ஷக்ரியார், சீனாவின் லீ சாவ் ஆகியோர் தலா 4.5 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
    ரஷியாவின் டோமாஷேவ்ஸ்கை 3.5 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தையும், இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்ட் இரு புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர். கெல்ஃபான்ட் ஒரு வெற்றியைக்கூட பெறவில்லை. அவர் 4 தோல்விகளையும், 5 டிராவையும் பதிவு செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai