Enable Javscript for better performance
சீன ஓபன்: அரையிறுதியில் முர்ரே, ஃபெரர்- Dinamani

சுடச்சுட

    
    murray

    காலிறுதியில் ஆக்ரோஷமாக ஆடிய முர்ரே.

    சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
    சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆன்டி முர்ரே 7-6 (9), 6-2 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான கைல் எட்மான்டை தோற்கடித்தார்.
    மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-7 (4), 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவை தோற்கடித்தார்.
    மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-3, 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவை தோற்கடித்தார்.
    இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பெட்ராவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் மேடிசன் கீஸ்.
    வெற்றி குறித்துப் பேசிய மேடிசன் கீஸ், "பெட்ரா இந்த ஆட்டத்தை மிக சவாலானதாக மாற்றினார். எனினும் விடாப்பிடியாக போராடி வெற்றி கண்டது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டன் வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-4, 6-0 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை ஜங் ஷுவாயை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai