Enable Javscript for better performance
போராடித் தோற்றது வங்கதேசம்- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது வங்கதேசம்.

    வங்கதேசத்தின் மிர்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 101, கேப்டன் ஜோஸ் பட்லர் 63, டக்கெட் 60 ரன்கள் குவித்தனர்.

    வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா, ஷஃபியுல் இஸ்லாம், அல்ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் பேட் செய்த வங்கதேச அணியில் இம்ருள் கயெஸ்-ஷகிப் அல்ஹசன் ஜோடி வெளுத்து வாங்க, அந்த அணி வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. ஆனால் அல்ஹசன் 79 ரன்களில் (55 பந்துகளில்) ஆட்டமிழக்க, ஆட்டத்தின் போக்கு மாறியது. இம்ருள் கயெஸ் 112 ரன்கள் (119 பந்துகளில்) குவித்து வெளியேற, எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதனால் 47.5 ஓவர்களில் 288 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம். இங்கிலாந்து தரப்பில் ஜேக் பால் 5 விக்கெட் எடுத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai