Enable Javscript for better performance
ரஷிய ஓபன்: அரையிறுதியில் ருத்விகா- Dinamani

சுடச்சுட

    

    ரஷிய ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி காடே, சிறில் வர்மா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ருத்விகா தனது காலிறுதியில் 13-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலீனாவை தோற்கடித்தார்.
    மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தன்வி லேடு 16-21, 19-21 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஈவ்ஜெனியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
    ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சிறில் வர்மா 21-12, 21-18 என்ற நேர் செட்களில் மலேசியாவின் ஜல்ஹெல்மியை வீழ்த்தினார்.
    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-பிரணவ் சோப்ரா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 21-10, 21-8 என்ற நேர் செட்களில் ரஷியாவின் அலெக்சாண்டர்-கிறிஸ்டினா ஜோடியைத் தோற்கடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai